சட்ட விழிப்புணர்வு முகாம்.

சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.;

Update: 2025-02-24 04:46 GMT
ஜெயங்கொண்டம் பிப்.23- போதைப் பொருட்களின் தாக்கத்திலிருந்தும் போதை சிந்தனையில் இருந்தும் இன்றைய இளைய மாணவ மாணவியர் தற்காத்து சமூக வளர்ச்சிக்கு ஆணி வேராக இருக்க நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாம் தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் கட்டளை படியும் , அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி மலர் வாலண்டடினா வழிகாட்டுதல் படி அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டம் , தத்தனுரில் உள்ள இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருட்களின் தாக்கத்திலிருந்தும் போதை சிந்தனையில் இருந்தம் இன்றைய இளைய மாணவ மாணவியர் தற்காத்து சமூக வளர்ச்சிக்கு ஆணி வேராக இருக்க ஒரு சிறப்பு விழிப்புணர்வு முகாம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவர் மற்றும் சார்பு நீதிபதி தலைமையில் நடைபெற்றது. வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவர் மற்றும் சார்பு நீதிபதி முனைவர் லதா தலைமை உரையில் நமது வாழ்வில் பாதி நாட்கள் உறக்கத்திற்கு செலவிடப்படுகிறது உயிர்ப்புடன் வாழ சில நாட்களே நமக்கு கிடைக்கின்றன. அந்தச் சிறு நாட்களில் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி போதை சிந்தனையில் மிதப்பது உயிரற்ற வாழ்விற்கு சமமாகிறது. ஆசிரியருக்கு தெரியாமல் மது அருந்தலாம், போதைப்பழக்கம் கொள்ளலாம். பெற்றோர்களுக்கு தெரியாமல் போதைப் பழக்கம் கொள்ளலாம். ஆனால் நண்பர்களுக்கு தெரியாமல் போதைப் பழக்கத்தில் ஈடுபட முடியாது .சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் நாம் நன்றாக இருக்க வேண்டும் சுற்றி இருப்பவர்களும் நன்றாக இருக்க வேண்டும் . என்பதை உணர்ந்து இந்த சமூகத்தை வழி நடத்துபவர்களாக இளைய தலைமுறையினர் இருக்க வேண்டும். வழித்தடம் மாறும்போது நமது வாழ்வு அது சிறை கம்பிகளுக்கு பின்னால் தொலைந்து போகும் அபாயம் உள்ளது. தடம் மாறாமல் தடம் பதிக்க அறிவுசார் புத்தகத்தை ஆயுதமாக ஏற்க வேண்டும். தமிழ்நாட்டில் தான் வயிற்றுப் பசிக்கும் அறிவுப் பசிக்கும் மிகக் குறைந்த விலையில் உணவாக புத்தகமாக கிடைக்கின்றன . உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்து இச்சமூக வளர்ச்சிக்கு இன்றைய நம் சமூகத்தினர் உறுதுணையாக இருக்க வேண்டும். தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் தலைமுறையினர் தலை நிமிர வித்தாவோம். இளைய சமூகத்தினர்.போதை பொருட்கள் பயன் படுத்த மாட்டேன் என்றும், மது அருந்த மாட்டேன் என்றும், செல்போன்களை அதிகமாக பயன்படுத்த மாட்டேன் என்றும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதனை ஏற்று நிகழ்வின் இறுதியில் மாணவர்கள் போதைப் பொருட்களை தீண்ட மாட்டோம் என்றும் மாணவியர் போதைப் பொருட்களுக்கு அடிமையான ஆண்களை ஏற்கமாட்டோம் என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். சிறப்பு சார்பு நீதிபதி அனிதா கிரிஸ்டி, மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி கணேஷ் போதை ஒழிப்பு பற்றி சிறப்புரையாற்றி சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். வழக்கறிஞர் பாலமுருகன் கலந்துகொண்டு சட்ட கருத்துரையாற்றினார்.. கல்லூரியின் தாளாளர் ரகுநாதன் வரவேற்புரை வழங்கினார். இறுதியில் கல்லூரியின் முதல்வர் சங்கீதா நன்றியுரை வழங்கினார். இரும்பால் ஆசிரியர்களும், ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகளும் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர். இம்முகாமின் அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி தாளாளர் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து வட்ட சட்டப்பணிகள் குழுவின் நிர்வாக உதவியாளர் புனிதா மற்றும் சட்ட தன்னார்வலர் ராஜாஜி ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தனர்

Similar News