காடுவெட்டியில் மறைந்த முன்னாள் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மணிமண்டபத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வருகை தந்து கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்
காடுவெட்டியில் மறைந்த முன்னாள் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மணிமண்டபத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வருகை தந்து கட்சிக் கொடியை ஏற்றி காடுவெட்டி குருவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.;
அரியலூர், பிப்.24- காடுவெட்டியில் மறைந்த முன்னாள் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மணிமண்டபத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வருகை தந்து கட்சிக் கொடியை ஏற்றி காடுவெட்டி குருவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சியில் பாமக அங்கம் வகிக்கும் என தெரிவித்தார். சமீபத்தில் திருவண்ணாமலையில் உழவர் பேரியக்க மாநாடு நடத்தினோம் அதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர் அப்போது காவல்துறையினர் உணவகங்கள் தேநீர் விடுதி உள்ளிட்டவைகளை மூட அறிவுறுத்தினர் இதேபோல் நேற்று கும்பகோணத்தில் சமய நல்லிணக்க மாநாடு நடத்தினோம் இதே போல் கும்பகோணம் ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள் தேனீர் விடுதிகளை மூட காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். காவல்துறையினரை வைத்து தமிழக அரசு மாநாடு வெற்றி பெறக் கூடாது என இது போன்று கீழ்தரமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டம் ஒழுங்கு கடைபிடிப்பது வேறு ஆனால் எங்களால் எந்த சட்ட ஒழுங்கும் பாதிப்பு ஏற்படவில்லை இது போன்ற செயல்களில் காவல்துறை ஈடுபடக்கூடாது காவல்துறையினர் கஞ்சா போதைப்பொருள் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களை கைது செய்ய வேண்டும் தமிழ்நாட்டில் ஒரு மாதத்தில் 15 பாலியல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இதுபோன்று இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெறவில்லை பாலியல் சம்பவங்கள் நடைபெறுவதற்கு மதுவும் கஞ்சாவும் தான் காரணம் எனவும் காவல்துறையினர் அவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். தினந்தோறும் தொலைக்காட்சியில் தமிழக முதல்வர் போதைக்கு அடிமையாகாதீர்கள் என தெரிவித்தால் மட்டும் போதாது காவல்துறையினரை வைத்து உடனடியாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் தமிழக முதல்வர் ஸ்டாலின் விளம்பர அரசியல் செய்வதாகவும் குற்றம் சாட்டினர். வட மாநிலங்களை போன்று தமிழ்நாட்டில் உடனடியாக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். ஊழல் ஊழல் லஞ்சம் லஞ்சம் எந்தத் துறை எடுத்தாலும் ஊழல் லஞ்சம் என்றும் ஊழல் ஆட்சி நடைபெறுவதாகவும் தெரிவித்தார் மின் கணக்கெடுப்பு நடத்தினால் 40 விழுக்காடு கட்டணம் குறையும் எனவும் மின்கணக்கு எடுக்காத காரணத்தினால் 36 சதவீதம் மின்கட்டணம் உயர்ந்துள்ளதாகவும் மின்சாரத்துறை நட்டத்தில் இயங்குவதாகவும் தெரிவித்தார். தேர்தல் என்பது அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினர்.