பல்வேறு திட்ட பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தொடங்கி வைத்தார்.;
அரியலூர், பிப்.24- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,ஆண்டிமடம் ஒன்றியம், 1).மருதூரில்,நெடுஞ்சாலைத்துறை சார்பில்,முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டம் 2024 -2025 ன் கீழ்,ரூ.2100.00 இலட்சம் மதிப்பீட்டில்,அரியலூர் முதல் ஜெயங்கொண்டம் (செந்துறை வழி) (30/0 - 33/0) வரை உள்ள இரு வழி தடத்தினை நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல், 2).வாரியங்காவலில்,நெடுஞ்சாலைத்துறை சார்பில்,முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டம் 2024 -2025 ன் கீழ், ரூ.2450.00 இலட்சம் மதிப்பீட்டில், அரியலூர் முதல் ஜெயங்கொண்டம் (செந்துறை வழி) (30/0 - 33/0) வரை உள்ள இரு வழி தடத்தினை நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல், ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு பொ.இரத்தினசாமி அவர்கள் தலைமையில்,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் முன்னிலையில்,மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் வடிவேல்,ஊரக வளர்ச்சி திட்ட முகமை திட்ட இயக்குனர் முனைவர் ஆ.ரா.சிவராமன்,உதவி திட்ட இயக்குனர் (ஊராட்சிகள் தனிக்கை) பழனிச்சாமி,உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் R.ஷீஜா,உதவி கோட்டப் பொறியாளர் மனோகரன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜாஹிர்,கஸ்தூரி,ஒன்றிய கழக செயலாளர்கள் ஆர்.கலியபெருமாள் (ஆண்டிமடம் தெற்கு),தன.சேகர் (ஜெயங்கொண்டம் வடக்கு),செல்வராஜ் (செந்துறை தெற்கு) மற்றும் அரசு அலுவலர்கள்,கழக தோழர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.