அரியலூரில் பொதுமருந்தகங்களை போக்குவரத்து துறை அமைச்சர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
அரியலூரில் பொது மருந்தகங்களை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.;
அரியலூர், பிப்.24- செந்துறையில்,சென்னையிலிருந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டுறவுத்துறை சார்பில்,மக்களுக்கு பொது மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்க செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் 1000,”முதல்வர் மருந்தகத்தினை” காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து,மாவட்ட ஆட்சித்தலைவர் திரு பொ.இரத்தினசாமி அவர்கள் தலைமையில்,ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள்,அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா ஆகியோர் முன்னிலையில், மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் மருந்தகத்தினை,குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.இந்நிகழ்வில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் மா.உமா மகேஸ்வரி அவர்கள்,உடையார்பாளையம் கோட்டாட்சியர் R.ஷீஜா,கூட்டுறவு சரக துணைப் பதிவாளர் சை.அமீர் அஹசன் முசபர் இம்தியாஸ்,கூட்டுறவு மாவட்ட இணை பதிவாளர்(பொது விநியோகம்) சாய்நந்தினி, செந்துறை ஒன்றிய கழக செயலாளர்கள் செல்வராஜ் (தெற்கு), எழில்மாறன்(வடக்கு) மற்றும் அரசு அலுவலர்கள்,கழக தோழர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.