*வாணியம்பாடியில் முன்பக்க டயர் வெடித்து, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் எதிர்திசையில் சென்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளான கார்*

*வாணியம்பாடியில் முன்பக்க டயர் வெடித்து, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் எதிர்திசையில் சென்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளான கார்*;

Update: 2025-02-24 12:04 GMT
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் முன்பக்க டயர் வெடித்து, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் எதிர்திசையில் சென்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளான கார் *அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய வங்கி ஊழியர சென்னையை சேர்ந்த ஆனந்த் என்ற வங்கி ஊழியர், காரில் பணி நிமித்தமாக சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கிச்சென்றுக்கொண்டிருந்த போது, திருப்பத்தூர் மாவட்டம்.. வாணியம்பாடி உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், சென்றுகொண்டிருந்த போது, திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் எதிர்திசையில் சென்ற லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஆனந்த் சிறுகாயங்களுடன் உயிர்தப்பிய நிலையில், உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள், அவரை மீட்டு சிகிச்சையிற்காக ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி நகர காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் விபத்துக்குள்ளான காரை சாலையிலிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டு, இவ்விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்..

Similar News