செல்வி ஜெயலலிதா பிறந்தநாள் விழா நடைபெற்றது

அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது;

Update: 2025-02-24 12:59 GMT
தமிழக முன்னாள் முதல்வரும் , அதிமுக நிறுவன தலைவருமான ஜெ. ஜெயலலிதா அவர்களின் 77-ஆவது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டது ,, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் முன்னாள் அமைச்சர் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி. தங்கமணி அவர்கள் தலைமையில் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்கள் தூவி கழகக் கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். பேசும்பொழுது எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிக்கு பாடுபடுவோம், பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி யார் அவர்கள் தலைமையில் சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார் . இந்த நிகழ்வில் பள்ளிபாளையம் நகரக் கழக செயலாளர் பி. எஸ். வெள்ளியங்கிரி, ஒன்றிய கழக அதிமுக சேர்மன் செந்தில், வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன்,அம்மா பேரவை செயலாளர் டி.கே.சுப்பிரமணி , பள்ளிபாளையம் நகர அதிமுக துணைச் செயலாளர் ஜெய்கணேஷ் , நகர பொருளாளர் சிவக்குமார், ஆலாம்பாளையம் பேரூர் கழக செயலாளர் செல்லதுரை, படைவீடு பேரூர் கழக செயலாளர் ஜெகநாதன் பொது குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு, மகளிர் அணி, மாணவர் அணி, பாசறை மற்றும் இளைஞர் அணி மற்றும் ஏராளமானோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்...

Similar News