உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் விழிப்புணர்வு
உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் விழிப்புணர்வு நடைபெற்றது.;
அரியலூர் பிப்.24- உடையார்பாளையம் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் உதவி தலைமை ஆசிரியர் இங்கரசால் தலைமையேற்றார். மஞ்சுளா வரவேற்றார் .சிறப்பு விருந்தினராக ஜெயங்கொண்டம் அரசு மகளிர் காவல் நிலையத்தின் காவல் உதவி ஆய்வாளர் இலஞ்சியம் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை பற்றி புகார் கொடுக்க வேண்டிய எண்கள் ,1098 ,181 பற்றிய விழிப்புணர்வு வழங்கினார். மேலும் பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமைகள் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த அளவுக்கு பின் வாழ்க்கையில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பற்றி விளக்கமாக மாணவிகளுக்கு எடுத்துரைத்தார் .மேலும் தலைமை காவலர் சித்ரா மாணவிகளுக்கு அறிவுரைகளை வழங்கி, யாரிடம் பேசும்போதும் புகைப்படம் எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் , புகைப்படம் எடுப்பதால் அதை பயன்படுத்தி உங்களை வன்கொடுமைக்கு ஈடுபடுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்பதை பற்றி எடுத்து கூறினார். நிகழ்வில் ஆசிரியர்கள் செல்வராஜ், சாந்தி,அமுதா, பூசுந்தரி,தமிழரசி , தமிழ் ஆசிரியர் இராமலிங்கம் கலந்து கொண்டனர் முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ஷாயின்ஷா நன்றி கூறினார்.