பணம் கேட்டு தொல்லை : மகனைபெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த தாய்
பணம் கேட்டு தொல்லை : மகனைபெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த தாய்;
பணம் கேட்டு தொல்லை : மகனைபெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த தாய் திருவள்ளூர் அருகே பரபரப்பு திருவள்ளூர் அருகே மகனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த தாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மகனுக்குதிருமணமாகியும் வேலைக்குச் செல்லாமல் மது போதையில் பணம் கேட்டு தன்னை துன்புறுத்தி வந்ததால் கடும் ஆத்திரத்தில் இச்செயலை செய்ததாக தாய் காவல்துறையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. திருவள்ளூர் அடுத்த தொடுகாடு நமச்சிவாயபுரம் கிருஷ்ணன் கோவில் தெருவில்வசித்து வந்தவர் கிருஷ்ணமூர்த்தி வயது27திருமணமானவர் .இவருக்கு பாரதி வயது 23 என்ற மனைவியும் இரு குழந்தைகள் உள்ளனர்.இவரது தந்தைசங்கர்ஏற்கனவேஇறந்துவிட்டார்.இவர்களுடன் தாய் ஜெயந்தி வசித்து வந்தார். இந்நிலையில் மகன்கிருஷ்ணமூர்த்தி எந்த வேலைக்கும் செல்லாமல்எப்போதும் மது போதையிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.மேலும்தான் புதிய தொழில் தொடங்குவதற்காகதனது தாய் ஜெயந்தியிடம் தினமும் மது போதையில் பணம் கேட்டு தொந்தரவு செய்துவந்ததாக கூறப்படுகிறது.இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தாய் ஜெயந்தி நேற்று காலை வழக்கம் போல்எழுந்து பாத்ரூமுக்கு சென்றுள்ளார். அப்போதும்தாயிடம் மகன் கிருஷ்ணமூர்த்தி பணம் கேட்டு தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால் தாய், மகனிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுஒருவரை, ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டுள்ளனர்.ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில்கடும் ஆத்திரத்தில் இருந்த தாய் ஜெயந்தி தனது வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து வந்து மகன் கிருஷ்ணமூர்த்தி மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தி உள்ளார். இதில் மிகுந்த தீக்காயங்களுடன் அலறி துடித்த கிருஷ்ணமூர்த்தியைஅவரது மனைவிபாரதி மற்றும் அக்கம், பக்கம் இருந்தவர்கள்ஓடி வந்துமிக ஆபத்தான நிலையில் இருந்த கிருஷ்ணமூர்த்தியை மீட்டு திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில்சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் சென்னைகீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைபெற்றுவந்தமகன்கிருஷ்ணமூர்த்தி நேற்று நள்ளிரவுசிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்,இது குறித்துகிருஷ்ண மூர்த்தியின் மனைவிபாரதி அளித்த புகாரின் பேரில் மகனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த தாய் ஜெயந்தியை மப்பேடு காவல்துறையினர் கைது செய்துதீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.