சிஐடியு சார்பாக மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம்.*

சிஐடியு சார்பாக மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம்.*;

Update: 2025-02-25 14:23 GMT
விருதுநகரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மற்றும் விருதுநகர் சிஐடியு சார்பாக மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம். விருதுநகரில் அமைந்துள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மற்றும் விருதுநகர் சிஐடியு சார்பாக மாநில தலைவர் மற்றும் திட்டத் தலைவர் வி .சந்திரன் தலைமையில் திட்ட செயலாளர் ராஜாராம் முன்னிலையில் மின்வாரியத்தில் உள்ள 6000 காலிப்பணியிடங்களில் ஆரம்ப கட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், ஸ்மார்ட் பீட்டர் திட்டத்தை புகுத்த கூடாது, கேங்மேன் பதவியை கள உதவியாளர் பணியாக மாற்றிட வேண்டும், ஊதிய உயர்வு மற்றும் வேலைப்பளுவிற்கான பேச்சுவார்த்தையை உடனே துவங்கிடவேண்டும் உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று மின்வாரிய பணியாளர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்களை எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர்

Similar News