வரும் தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான தேர்தல் என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள்ராஜேந்திரபாலாஜி பேச்சு
வரும் தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான தேர்தல் என ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லியில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு ....;
வரும் தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான தேர்தல் என ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லியில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு .... மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாள் விழா விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டது . இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்ட நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வீரவால் பரிசாக அளிக்கப்பட்டது. பின்பு புதிதாக நடப்பட்ட கொடிக்கம்பத்தில் அதிமுக கொடியினை ராஜேந்திரபாலாஜி ஏற்றி வைத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மேலும் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர் நிறைபாண்டி, அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் மல்லி தங்கமுத்து , மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் செந்தில்குமார் மற்றும் செந்தில்வேல் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,எடப்பாடி பழனிச்சாமி நான்கரை ஆண்டு காலம் அற்புதமான ஆட்சியை கொடுத்தார்.தற்போது உள்ள திமுக ஆட்சியில் யாருக்கும் எந்த நன்மையும் கிடையாது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.விளம்பரத்தை வைத்து ஸ்டாலின் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.விளம்பரத்தால் உயர்ந்தவர் வாழ்க்கை நிரந்தரமாகாது.ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எடப்பாடியாரை கோட்டைக்கு அனுப்ப வேண்டும்.வரும் சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். வரும் தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான தேர்தல் .தர்மத்தின் பக்கம் எடப்பாடியார் இருக்கிறார் .அதர்மத்தின் பக்கம் மு.க ஸ்டாலின் இருக்கிறார்.யார் வேண்டுமென்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள்.இல்லாத மக்களுக்கு அள்ளிக் கொடுக்கின்ற அதிமுக ஆட்சி வேண்டுமா? இருப்பதையெல்லாம் சுருட்டிக்கொண்டு தன் குடும்பத்திற்கு வைத்துக் கொள்கின்ற திமுக ஆட்சி வேண்டுமா? என்பது முடிவெடுங்கள் என பேசினார்.