மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்..
மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு 500க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு 500க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்திய தணித்து மீண்டும் மொழிப்போருக்கு நிர்ப்பந்திக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பகலவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் மன்னை சோழராஜன், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் பா.ஆனந்த், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநில துணைச் செயலாளர் ஜே.பி.வீரபாண்டியன் மாநிலக் குழு உறுப்பினர் க.கோபி, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான பூண்டி கலைவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று மும்மொழி கொள்கைக்கு எதிராகவும் ஒன்றிய அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.