ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;
.அரியலூர், பிப்.26- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மது மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை நகராட்சி ஆணையர் அசோக்குமார் தொடங்கி வைத்தார் பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சார்ந்த மாணவ மாணவிகள் 700க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு போதை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கோஷம் எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.மேலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். பேரணியானது ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் பள்ளியில் தொடங்கி பஸ் ஸ்டாண்ட் ரோடு, கடைவீதி, நான்கு ரோடு, தா.பழூர் ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியே பேரணியாக சென்றனர். துப்புரவு ஆய்வாளர் பாபு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் களப்பணி உதவியாளர் விஜயகுமார் துப்புரவு பணி மேற்பார்வையாளர் .காளிமுத்து தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் பாலகுமாரன், கலையரசி, உமாதேவி , ரேகா ,ஜோதி உள்ளிட்ட 700 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் .பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் உர்சலா சமந்தா நன்றி கூறினார்.