மாரியம்மன் கோயில்களில் பூச்சாட்டுதல்விழா கோலாகலம்

 குமாரபாளையம் மாரியம்மன் கோயில்களில் பூச்சாட்டுதல் விழா  கோலாகலமாக நடந்தது.;

Update: 2025-02-26 13:57 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவில் மகா குண்டம், தேர்த்திருவிழாவையொட்டி பிப். 18ல்  பூச்சாட்டுதல் விழா நடந்தது. நேற்று  மறு பூச்சாட்டு விழா நடந்தது.  பிப். 26ல் கொடியேற்றம், மார்ச் 4ல் தேர்கலசம் வைத்தல், அதே நாள் இரவு காவிரி ஆற்றிலிருந்து சக்தி அழைத்தல், மார்ச் 5ல் மகா குண்டம், பூ மிதித்தல், மார்ச் 6ல் அம்மன் திருக்கல்யாணம், தேர்த்திருவிழா, வண்டி வேடிக்கை, மார்ச் 7ல் தேர் நிலை நிறுத்துதல், வாண வேடிக்கை, அம்மன் திருவீதி உலா, மார்ச் 8ல் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, மார்ச் 9ல் அம்மனுக்கு ஊஞ்சல் விழா ஆகியன நடைபெறவுள்ளது. நேற்று குமாரபாளையம் நகரில் உள்ள தேவாங்கர் மாரியம்மன் கோவில் 24மனை மாரியம்மன் கோவில், பெரிய மாரியம்மன் கோவில் சமயபுரம் மாரியம்மன், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், உள்ளிட்ட அனைத்து மாரியம்மன் கோவில்களில் பூச்சாட்டு விழா நடந்தது. காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள், கம்பங்கள்  ஊர்வலமாக எடுத்து வந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. மாரியம்மன் கோவில் முன்பு கம்பம் நடப்பட்டு, அக்னிசட்டியுடன் வலம்   வந்து, கம்பத்தின் மீது அக்னிசட்டி வைக்கப்பட்டு, தீபாராதனை செய்யப்பட்டது.பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News