சிவராத்திரியில் தென்காசி காசி விசுவநாதர் கோயிலில் திரண்ட மக்கள்
காசி விசுவநாதர் கோயிலில் திரண்ட மக்கள்;
இந்துக்களின் முக்கியமான தினங்களில் ஒன்று சிவராத்திரி. இதையொட்டி நேற்று காலை முதலே பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் ஆராதனைகள், அபிஷேகங்கள், நடைபெற்று வருகின்றன. மக்கள் தங்களது குலதெய்வம் கோயிலில் சென்று சிறப்பு வழிபாடுகள் செய்வதும் வழக்கம். இதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் தென்காசியின் புகழ்பெற்ற காசி விசுவநாதர் கோயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு விடிய விடிய தரிசனம் செய்தனர். இதில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதிளையும் நடைபெற்றது நிகழ்ச்சி தள்ளாத பக்தர்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.