சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கன்னியாகுமரி போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் எட்வர்ட் பிரைட் தலைமையிலான போலீசார் கன்னியாகுமரி பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வடக்கு குண்டால் பகுதியை சேர்ந்த சாந்தகுமாரி (56) என்பவர் அவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவரிடம் இருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து கன்னியாகுமரி போலிசார் வழக்கு பதிவு செய்து சாந்தகுமாரியை கைது செய்தனர்.