தென்காசியில் ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு

ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு;

Update: 2025-02-27 13:05 GMT
தமிழ்நாடு அரசு உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் கடலூர், தர்மபுரி, தென்காசி மற்றும் திருச்சி மாவட்டங்களில் ரூ. 10.82 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள "விழுதுகள் -ஒருங்கிணைந்த சேவை மையம்" உட்கோட்ட அளவில் 9 மையங்கள் மற்றும் வட்டார அளவில் 38 மையங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (27.02.2025) திறந்து வைத்ததைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள். தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. மரு.ராணிஸ்ரீகுமார் அவர்கள், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ் பழனிநாடார் அவர்கள் ஆகியோர் தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்கள். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Similar News