நீரொழுங்கிகள் மறுகட்டுமான பணி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
புலவனார் மற்றும் பூனாயிருப்பு நீரொழுங்கிகள் மறுகட்டுமான பணியினை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் துவக்கி வைத்தார்.;
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், புலவர்நத்தம் மற்றும் பூனாயிருப்பு கிராமங்களில் புலவனார் வாய்க்காலின் குறுக்கே புலவனார் மற்றும் பூனாயிருப்பு நீரொழுங்கிகள் மறுகட்டுமான பணியினை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன் தொடங்கி வைத்தார்கள். திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், புலவர்நத்தம் மற்றும் பூனாயிருப்பு கிராமங்களில் புலவனார் வாய்க்காலின் குறுக்கே புலவனார் மற்றும் பூனாயிருப்பு நீரொழுங்கிகள் மறுகட்டுமான பணி ரூ.210.00 இலட்சம் மதிப்பீட்டில், வெண்ணாற்றின் இடதுகரையின் தொலைவு 91.09 கிலோ மீட்டரில் புலவனார் வாய்க்கால் பிரிகின்றது. இதன் மொத்த நீளம் 5.00 கிலோ மீட்டர் ஆகும். புலவனார் வாய்க்காலின் முடிவு – தொலைவு 5.00 கி.மீ-ல் புலவனார் நீரொழுங்கி அமைந்துள்ளது. அடைப்பு பலகைகள் 6 எண்ணிக்கையிலும், முழு நீர் அளவு : 107 கனஅடி ஃ வினாடி, வாய்க்கால் அகலம் 13.50 மீட்டரும், 37.91 ஏக்கர் பாசன பரப்பும் கொண்டுள்ளது. மேல்புறம் 4 ‘பி’ பிரிவு வாய்க்கால்களும், கீழ்புறம் பூனாயிருப்பு, சன்னதி, சாரநத்தம் ஆகிய மூன்று நீரொழுங்கிகளும், 4 ‘பி’ பிரிவு வாய்க்கால்களும் உள்ளன. வயலாங்குடி, புலவர்நத்தம், வேடம்பூர், ஆலங்குடி ஆகிய கிராமங்கள் இப்பாசனத்தினால் பயனடைய உள்ளன.