சமுதாய வளைகாப்பு விழா மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி வட்டாரத்திற்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டப்பணிகள் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் கலந்து கொண்டார்.;
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி வட்டாரத்திற்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டப்பணிகள் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன் கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு பதினோரு வகையான சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில், மாவட்ட திட்ட அலுவலர் (பொ) புவனேஸ்வரி, மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் மதிவதனா, கொரடாச்சேரி பேரூராட்சித்தலைவர் கலைச்செல்வி செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபு, செல்வி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.