திடீர் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்..

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட அபிவிருத்தீஸ்வரம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2025-02-27 15:53 GMT
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட தமிழ்நாடு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வ.மோகனச்சந்திரன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன் அவர்களும் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அபிவிருத்தீஸ்வரம் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டுவருகின்றனவா என்பது குறித்து கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களிடமும், நெல் மூட்டைகள் கொண்டுவந்த விவசாயிகளிடமும் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.

Similar News