சுமைப்பணி தொழிலாளர்கள் சாலை மறியல்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பேரளம் ரயில் நிலைய அருகே சுமைப்பணி தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டினார்.;
திருவாரூர் மாவட்டம், பேரளம் ரயில் நிலையத்தில் இருந்து நெல்-அரிசி மூட்டைகளை வெளிமாவட்டத்திற்கு அரவைக்கு, TNCSC நிர்வாகம், ரயில்வே வேகன் மூலம் கொண்டு செல்லவும், குட்ஷெட்டில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை கிடைக்க வலியுறுத்தியும், சிஐடியு - சுமைப்பணி தொழிலாளர் சங்கம் சார்பாக பேரளம் ரயில் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் பேரளம் குட்செட் சுமைப்பணி சங்க தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. சுவைப் பணி சங்க மாவட்ட செயலாளர் கஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் டி.முருகையன், சிஐடியு மாவட்ட பொருளாளர் மாலதி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் இந்த சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர்.