மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..

ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டம் 2024 ஐ திரும்ப பெறக் கோரி திருவாரூர் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..;

Update: 2025-02-27 16:47 GMT
வக்ஃப் வாரியங்களை முடக்கி வக்ஃப் சொத்துகளை ஆக்கிரமிக்க வழி வகுக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான பாரபட்சமான விதிகளைக் கொண்டிருக்கும் வக்ஃப் திருத்த மசோதா 2024ஐ முஸ்லிம்களும் மனிதநேய மக்கள் கட்சி உட்பட மதசார்பற்ற கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்த வக்ஃப் திருத்த மசோதாவிற்கு தமிழ்நாட்டில் பாஜவை தவிர அனைத்து கட்சிகளும் எதிர்த்து வருகிறனர். இந்த சட்டத்தை கொண்டுவந்துள்ள ஒன்றிய அரசை கண்டித்தும், இத்திருத்த சட்டத்தை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும் திருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பாதுஷா கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 1000மேற்ப்பட்ட ஆண்களும் பெண்களும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Similar News