பொது சுகாதாரம் மற்றும் கழிவறையின் பயன்பாடு பற்றிய குழு திட்ட விழிப்புணர்வு

குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சமூகப் பணித்துறை சார்பில் பொது சுகாதாரம் மற்றும் கழிவறையின் பயன்பாடு பற்றிய குழு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது;

Update: 2025-02-27 16:57 GMT
பெரம்பலூர் வட்டம், செங்குணம் அண்ணா நகர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் இன்று இரவு 7 மணியளவில் குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சமூகப் பணித்துறை சார்பில் பொது சுகாதாரம் மற்றும் கழிவறையின் பயன்பாடு பற்றிய குழு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது பெரம்பலூர் அம்மா கல்வி மற்றும் தொண்டூழிய பணிக்கள நிர்வாக அறங்காவலர் அ.முத்தமிழ்செல்வன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளிடையே பொது சுகாதாரம் மற்றும் கழிவறை பயன்பாடு பற்றி பேசினார். கல்லூரி சமூக பணித்துறை கௌரவ விரிவுரையாளர் செ.ஆனந்தராஜ் , குழு திட்ட மாணவ உறுப்பினர்கள் சி.அனுசுயா, சீ.அகிலா, அ.பூவரசன் செ.விஜயகுமார், ஆ.நவின், செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலக செயலர் மு.கோவிந்தன், ஒய்வு பெற்ற அங்கன்வாடி பணியாளர் மரிய அந்தோணியம்மாள் மற்றும் செங்குணம் குமார் அய்யாவு உட்பட பலர் கலந்து கொண்டனர்

Similar News