மருத்துவக் கல்லூரி முதல்வர் விளக்கம்.

திருவாரூர் அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருந்துமாத்திரைகள் பற்றாக்குறை இல்லை என கல்லூரி முதல்வர் பேட்டி..;

Update: 2025-02-27 17:14 GMT
திருவாரூர் அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருந்துமாத்திரைகள் பற்றாக்குறை இல்லை என கல்லூரி முதல்வர் நேற்று பேட்டி அளித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்.. திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் போதைமறுவாழ்வு சிகிச்சை ஏற்கனவே நடந்து வந்தநிலையில் இவர்களுக்கு என தனிசிகிச்சை மையம் தமிழக முதலமைச்சர் காணொளி காட்சிவாயிலாக இன்று(27) திறந்துவைத்துள்ளார் கடந்தஆண்டில் சுமார் 750 பேர் இதன் மூலம் சிகிச்சை பெற்று வீடுதிரும்பியதாகவும் இந்தசிகிச்சையில் 60% முதல் 70% வரை முழுமையாக குணம் அடைவதற்கு வாய்ப்பு உள்ளது. வீடுதிரும்பியவர்களையும் தொடர்கண்காணிப்பில் வைத்துள்ளோம். மூன்று வார சிகிச்சையில் நல்லபலன் கிடைக்கும் மருந்துமாத்திரைகள் மட்டுமின்றி உளவியல் (கவுன்சிலிங்) பொழுதுபோக்கு அம்சங்களும் வழங்கப்படுகிறது என தெரிவித்தார். மேலும் மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் கழிவுநீர் சுத்திகரிப்பு பிளான்ட் PWD மூலம் அனுப்பி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதன் செயல்பாடுதுவங்கும் ,மருத்துவக் கல்லூரியில் மருந்து மாத்திரைகள் பற்றாக்குறை இல்லை. கிடைக்காத மருந்துகளும் வெளியில் வாங்கி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது எனவும், இதுதொடர்பாக புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த மருத்துவக் கல்லூரியில் எம்.ஆர்.ஐ. மற்றும் சி.டி.ஸ்கேன் மாதம் 30 நாட்களும் 24 மணி நேரம் எடுக்கப்படுகிறது மேலும் உள்நோயாளிகள் இருக்கும் இடத்திலேயே ஸ்கேன் எடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மருத்துவக் கல்லூரியில் வாகனம் நிற்கும் இடம் நீண்ட காலமாக இடையூராக உள்ளது அதை விரைவில் இடம்ஒதுக்கி சரிசெய்து தரப்படும் மருத்துவர்கள்பற்றாக்குறை கல்லூரியில் இல்லை பேராசிரியர்கள் மேற்பார்வையில் மருத்துவர்கள், உயர்படிப்பு படிக்கும் மருத்துவர்கள், பயிற்சிமருத்துவர்கள் எனஅனைவரும் பொதுமக்களுக்கு உரியசிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவக்கல்லூரிக்கு செவிலியர்கல்லூரி அனுமதி கேட்டுள்ளோம் விரைவில் வருவதற்கு வாய்ப்புஉள்ளது அதேபோல் அரசுஅறிவித்தபடி புற்றுநோய் சிகிச்சைமையம் விரைவில் திருவாரூர் மருத்துவ கல்லூரிக்கு செயல்பாட்டுக்கு வரும் என திருவாரூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .

Similar News