தேவதானப்பட்டி வாடிப்பட்டியை சேர்ந்தவர் சென்னம்மாள் (70). இவர் நேற்று முன்தினம் (பிப்.26) அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் பொருட்கள் வாங்குவதற்காக சாலையின் ஓரமாக நடந்து சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியாக பாலகிருஷ்ணன் என்பவர் ஓட்டு வந்த ஆட்டோ இவரது மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து போலீசார் வழக்கு (பிப்.27) பதிவு.