இராசிபுரத்தில், பாஜக சார்பில், மக்களுக்காக மக்களிடமிருந்து -கருத்து கேட்பு மனு: மாநில துணை தலைவர்கள் பங்கேற்பு..
இராசிபுரத்தில், பாஜக சார்பில், மக்களுக்காக மக்களிடமிருந்து -கருத்து கேட்பு மனு..;
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், பாஜக சார்பில், மக்களுக்காக மக்களிடமிருந்து - சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தொடர்பான, கருத்துக்கள் கேட்கும், வாகன பிரச்சார இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.. இதில், அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர்கள் Dr. K.P. இராமலிங்கம், V.P. துரைசாமி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும், அதிமுக மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் / முன்னாள் அமைச்சர் டாக்டர் வெ. சரோஜா ஆகியோர், இராசிபுரம் புதிய பேருந்து நிலையம், MGR சிலை அருகே இந்த வாகன பிரச்சார இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முன்னதாக, பாஜகவின் சட்டமன்றத் தேர்தல் - 2026 அறிக்கை தொடர்பான மக்களிடமிருந்து கருத்து கேட்கும் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு அதற்குரிய பெட்டிகளில் போடப்பட்டன. தொடர்ந்து, இராசிபுரம் மற்றும் வெண்ணந்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பொதுமக்களிடம், பாஜகவின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தொடர்பான மக்களிடமிருந்து கருத்து கேட்கும் படிவங்கள் வழங்கப்பட்டு, அவை பொதுமக்களால் பூர்த்தி செய்யப்பட்டு அதற்குரிய பெட்டிகளில் போடப்பட்டன. தொடர்ந்து, இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாஜக, அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியினர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கருத்துக்களை அடுத்த ஒரு வாரத்திற்குள் பெற்று தலைமைக்கு அளிப்பார்கள். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய அதிமுக மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் / முன்னாள் அமைச்சர் டாக்டர் வெ. சரோஜா, தேசிய ஜனநாயக கூட்டணி, மக்களுக்காக மக்களிடமிருந்து என்ற தலைப்பில் தமிழக பாஜக தேர்தல் அறிக்கை சட்டப்பேரவை தொகுதியில் இருந்து அப்பகுதி மக்களின் கருத்துக்களை மக்களிடமிருந்து பெற்று, அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கையாக வழங்க உள்ளது என்றும், மக்களுக்கு பயன்பெறக்கூடிய பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து வருகிறார் என்றும் டாக்டர் வெ. சரோஜா கூறினார். சிறப்புரையாற்றி பேசிய பாஜக மாநிலத் துணைத் தலைவர் டாக்டர். கே.பி. இராமலிங்கம், தமிழக முழுவதும் பொதுமக்களிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கையை பாஜக வழங்குவதால், மக்களின் முழுமையான எண்ணங்கள் இதில் பிரதிபலிக்கும். அதே வேளையில் தேசிய ஜனநாயக கூட்டணியினர், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகள் வாரியாக, முக்கிய பிரமுகர்களை நேரில் சந்தித்து, அவர்களிடம் இருந்தும் கருத்துக்களை பெறுவார்கள் என்றார். இந்த நிகழ்ச்சியில், பாஜக நாமக்கல் கிழக்கு மாவட்டத் பாஜக தலைவர் K.P. சரவணன், மாவட்ட துணை பொதுச்செயலாளர்கள் சேதுராமன், சுகன்யா நந்தகுமார், வழக்கறிஞர் இளங்கோ, மற்றும் வள்ளி ராஜா, ராசிபுரம் நகர தலைவர் பி.வேலு, மாநில, மாவட்ட, நகர பாஜக நிர்வாகிகள், அதிமுக, அமமுக, உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியினர், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.