பிஜிபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் தங்கப் பதக்கம் பெற்று சாதனை!

பல்கலைக்கழக மானியக் குழு (UGC) நடத்தும் பேராசிரியர் தகுதித் தேர்விலும் வெற்றி பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.;

Update: 2026-02-07 15:49 GMT
நாமக்கல்–கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பிஜிபி கலை மற்றும் அறிவியல் தன்னாட்சி கல்லூரி மாணவிகள் பல்கலைக்கழக அளவில் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.2022–2025 கல்வியாண்டில், உணவு மேலாண்மைத் துறையில் இளநிலை கல்வி பயின்ற மாணவி ம. மதுர தீபா, பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். அதே துறையைச் சேர்ந்த மாணவி ப. சந்திரமௌலி பல்கலைக்கழக அளவில் நான்காம் இடமும், மாணவர் ரெ.லட்சுமணன் ஏழாம் இடமும் பெற்றுள்ளனர்.மேலும் 2023–2025 கல்வியாண்டில், உணவுத் பதப்படுத்துதல் துறையில் முதுகலைப் பட்டம் பயின்ற மாணவி தி. நந்தா ஸ்ரீ, பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) நடத்தும் பேராசிரியர் தகுதித் தேர்விலும் வெற்றி பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். சாதனை புரிந்த மாணவிகள் மற்றும் மாணவர்களை பிஜிபி கல்வி குழுமங்களின் நிறுவனத் தலைவர் பழனி ஜி. பெரியசாமி, துணைத் தலைவர் விசாலாட்சி பெரியசாமி, தாளாளர் எம்.கணபதி, முதன்மையர் க. பெரியசாமி, முதல்வர் வே.கலைமணி, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆ.சண்முகசுந்தரம் உள்ளிட்ட பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்தி பாராட்டினர்.

Similar News