கடையில் போதிய வருமானம் இல்லாததால் முதியவர் தற்கொலை வீரபாண்டி காவல்துறையினர் விசாரணை
தற்கொலை;
தேனி வெங்கடாசலபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (62). இவர் அப்பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வரும் நிலையில் அதன் மூலம் போதிய வருமானம் கிடைக்காமல் இருந்துள்ளது. இதனால் மன வேதனையில் இருந்து வந்த அவர் சம்பவ நாளன்று விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (பிப்.27) ராமசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு.