விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைந்திருக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.;
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த விவசாயிகள் குறைந்திருக்கும் நான் கூட்டத்தில் பங்கேற்றனர். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல்களை உடனடியாக ஏற்றுமதி செய்ய வேண்டும். குருவை சாகுபடிக்கு காப்பீட்டு நிறுவனங்கள் முறையாக பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.