திருச்சி விமான நிலையத்தில் அரை கிலோ தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் பயணியொருவா் உடைமைகளுக்குள் மறைத்து கடத்தி வந்த அரை கிலோ தங்கத்தை சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்;
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இருந்து திருச்சி வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத் துறை, வான் நுண்ணறிவுப் பிரிவினா் சோதனைகளுக்கு உள்ளாக்கினா். அப்போது ஆண் பயணியொருவா் தனது உடைமைகளுக்குள் (பெட்டியில்) மறைத்து 549 கிராம் தங்கத்தை, 9 கம்பிகளாக்கி கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 47.97 லட்சமாகும். இதையடுத்து, தங்கத்தை பறிமுதல் செய்ததுடன், அந்தப் பயணியை கைது செய்து சுங்கத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனர்