தேனி மாவட்டம், கோகிலாபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (58). இவர் மதுரை மாவட்டத்தில் பொதுப்பணித் துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றிய நிலையில் அவர் அதிகளவில் கடன் வாங்கி உள்ளார். அதனை திருப்பி செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் நேற்று (பிப்.28) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு.