தேனி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
பறவைகள் கணக்கெடுப்பு;
தேனி மாவட்டத்தில் வருகிற 8, 9 தேதிகளில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பும், 15, 16 தேதிகளில் நிலம் வாழ் பறவைகள் கணக்கெடுப்பும் நடைபெற உள்ளது. பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் ஆர்வமுள்ளவர்கள் முதல்வரின் பசுமைத் தோழர் பிரியங்கா (97515 49317), உயிரியலாளர் சூரஜ்குமார்(63834 89107) ஆகியோரை தொடர்பு கொண்டு தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது