கம்பம் அருகே சுத்தமான குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் போராட்டம்
போராட்டம்;
கம்பம் அருகே க.புதுப்பட்டி பேரூராட்சியில் உள்ள 5-ம் வார்டு உதயம் நகர் பகுதிக்கு நேற்று (பிப்.28) பேரூராட்சி நிர்வாகம் மூலம் கான்கிரீட் கலவைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் லாரி மூலம் குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டது. கட்டுமானத்துக்கு பயன்படுத்தும் லாரியில் குடிநீர் விநியோகம் செய்த பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் லாரியில் இருந்த தண்ணீரை கீழே ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.