ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் 2-ம் போக பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் முறைப்பாசன அடிப்படையில் (பிப்.23) அன்று நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று (பிப்.28) வைகை அணையில் இருந்து வினாடிக்கு 650 கன அடி வீதம் கால்வாய் வழியாக மீண்டும் நீர் திறந்து விடப்பட்டது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம் போல் வெளியேறுகிறது.