தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி போடி நகர திமுகவினர் கொண்டாட்டம்.
பிறந்தநாள்;
தமிழகம் முதல்வர் ஸ்டாலினின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு போடி நகர் திமுகவினர் தேவர் சிலை முன்பாக தமிழ்நாட்டின் நலன்களையும் எதிர்காலத்தையும் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு ஒன்றுபட்டு போராடுவோம் என பல்வேறு உறுதிமொழிகளை ஏற்று பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி போடி நகர் திமுக கழக செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட திமுகவினர் கொண்டாடினர். அரசியல் தலைவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் இனிப்புகள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடும் நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளில் ஹிந்தி திணிப்பு மக்களவை தொகுதி மறு சீரமைப்பு உள்ளிட்ட ஒன்றிய அரசின் தமிழக அரசுக்கு எதிரான கொள்கைக்கு எதிராக உறுதிமொழி எடுத்து கொண்டாடிய நிகழ்வு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. அதனை தொடர்ந்து போடி பேருந்து நிலையத்திலிருந்து அரண்மனை வரை பயணித்த வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி ஸ்டாலின் பிறந்தநாளை திமுகவினர் உற்சாகமாக கொண்டாடினர்.