தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாடினர்.;
அரியலூர்,மார்ச் 1- தமிழக முதல்வரும், திமுக தலைவருமாக மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, அரியலூரில் அக்கட்சியினர் பொதுமக்களுக்கு அன்னசானம் வழங்கி சனிக்கிழமை கொண்டாடினர். அரியலூர் மாதா கோயில் அருகேயுள்ள பிள்ளையார் கோயிலில், டாஸ்மாக் தொமுச சார்பில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் (சிக்கன் பிரியாணி) வழங்கப்பட்டது. நீகழ்ச்சிக்கு அச்சங்கத்தின் மாவட்ட கவுன்சில் செயலர் மகேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சங்கர், தலைவர் சுந்தர்ராஜ், பொருளாளர் கொளஞ்சி, அமைப்புச் செயலர் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல், அரியலூர், ஜெயங்கொண்டம், தா.பழூர், திருமானூர், செந்துறை உள்ளிட்ட பகுதிகளிலும் திமுக நிர்வாகிகள் கட்சிக் கொடி ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். :