ஹிந்தி திணிக்கப்படவில்லை; விருப்பமுள்ளோா் கற்கலாம்: டிடிவி. தினகரன் பேட்டி
மத்திய அரசு தமிழகத்தில் ஹிந்தி மொழியை திணிக்கவில்லை. விருப்பமுள்ளோா் அதைக் கற்கலாம் என்றாா் அமமுக பொதுச் செயலா் டிடிவி. தினகரன்.;
திருச்சியில் சனிக்கிழமை அமமுக பொதுச் செயலா் டிடிவி. தினகரன்செய்தியாளர்களிடம் கூறுகையில்: மத்திய அரசு ஹிந்தியை திணிக்கவில்லை, விருப்பமுள்ளவா்கள் மூன்றாவதாக ஏதாவதொரு இந்திய மொழியை கற்றுக் கொள்ளலாம் என்றுதான் கூறியுள்ளது. தமிழக அரசுக்கு அதில் விருப்பமில்லையென்றால், இருமொழி கொள்கையைத்தான் பின்பற்றுவோம் என பிரதமரை சந்தித்து எடுத்துக் கூறி, தமிழகத்துக்குத் தேவையான நிதியைக் கேட்கலாம். பிரதமரும் தாயுள்ளத்தோடு நிதியை வழங்குவாா் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. மக்களவைத் தொகுதிகள் குறித்த பிரச்னைக்கான அனைத்துக் கட்சி கூட்டத்தில் அமமுகவும் பங்கேற்கும். சீமான் மீது காவல்துறை சட்ட பூா்வ நடவடிக்கைதான் மேற்கொண்டது. அதில் அரசியல் அழுத்தம் ஏதுமில்லை என்றாா் அவா்.