திருச்சி : இலவசத் திறன் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
திருச்சி மாநகராட்சி அறிவுசாா் மையத்தில் இலவசத் திறன் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.;
தமிழ்நாடு நகா்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் (டுஃபிட்கோ) நிா்வாக இயக்குநா் கே. விவேகானந்தன் ஆலோசனைப்படி, திருச்சி மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் தலைமையில் தொடங்கப்பட்டுள்ள இந்த மையத்தில் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. தொடா்ந்து இந்த மையத்தில் 18 முதல் 35 வயதுக்குள்பட்ட வேலையில்லா இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி, வேலைவாய்ப்பும், சுயதொழில் செய்ய விரும்புவோருக்கு அரசு மானியத்துடன் கடன்கள் பெற்றும் அளிக்கப்பட உள்ளது. தகுதியான பயனாளிகளுக்கு உதவித்தொகையாக ரூ. 6,000 முதல் ரூ. 12,000 வரை வழங்கப்படுகிறது. சுகாதாரப் பணியாளா்கள், சுய உதவிகுழுக்களின் குடும்பங்களை சாா்ந்தவா்கள் இப்பயிற்சியில் சேரலாம். பயிற்சியில் சேர இமெயில் முகவரி மூலம் அல்லது மாநகராட்சி மைய அலுவலகத்தை அணுகலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.