கச்சிராயபாளையம் அங்காள பரமேஸ்வரி கோவிலில், மயான கொள்ளை திருவிழா கடந்த பிப். 22, ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டு, இரவு நேரங்களில் வீதி உலா நடந்தது. தொடர்ந்து மயான கொள்ளை நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மாலை கோமகி ஆற்றங்கரையில் தீ மிதி வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.