பாலம் கட்டுமான பணிகளை அமைச்சர் ஆய்வு..
திருவாரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் 700 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலத்தினை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார்.;
திருவாரூர் கோட்டம், நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்புத்துறையின் சார்பில் ரூ.700.00 இலட்சம் மதிப்பீட்டில் கங்களாஞ்சேரி வடகண்டம் சாலை, கங்களாஞ்சேரி மணக்கால் சாலைகளை இணைக்கும் வெட்டாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடைபெறுவதனை மாண்புமிகு பொதுப் பணி (கட்டிடங்கள், நெஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்)த்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் உடனிருந்தார்.