முதலமைச்சர் வருகையை முன்னிட்டு முன்னேற்பாடுகள் நடவடிக்கை.
தமிழ்நாடு முதலமைச்சர் வருகையை முன்னிட்டு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தினை தொழில்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் இரண்டு நாள் கள ஆய்வினை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மார்ச் மூன்றாம் தேதி வருவதை முன்னிட்டு முதலமைச்சரை வரவேற்கும் இடங்களில் நடைபெற்று வரும் படிகளை தொழில் முதலீடு ஊக்குவிப்புத்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.