சேலம் தாதகாப்பட்டி கேட் அம்மாள் ஏரி ரோடு அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் மொகதீன் அப்துல் காதர் (வயது 56). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அவர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை கடைக்கு வந்த போது கடையின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பெட்டியில் வைத்திருந்த ரூ.30, ஆயிரம்,ஆதார் கார்டு, பான் கார்டு ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து அவர் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.