வேலூர் அரசு சித்த மருத்துவமனைக்கு 3 ஆயிரம் நெகிழி புட்டிகள் வழங்கல்.
வேலூர் அரசு சித்த மருத்துவமனைக்கு 3 ஆயிரம் நெகிழி புட்டிகள் வழங்கினார்கள்.;
பரமத்தி வேலூர், டிச. 22: பரமத்தி வேலூரில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவ பிரிவுக்கு, வேலூர் நகர அனைத்து வர்த்தக சங்கத்தினர் மற்றும் நண்பர்கள் குழுவினர் இணைந்து புற நோயாளிகளுக்கு மருந்து வழங்கும் நெகிழி புட்டிகளை இலவசமாக வழங்கினர். வேலூர் நகர அனைத்து வர்த்தக சங்கத் தலைவர் சுந்தரம், செயலாளர் சாமிநாதன், பொருளாளர் மகுடபதி, வேலூர் நண்பர்கள் குழுத் தலைவர் கேதாரநாதன், முன்னாள் தலைவர் சந்திரன், பொருளாளர் செல்வகுமார், துணைப் பொருளாளர் இளங்கோ உள்ளிட்டோர் வேலூர் அரசு சித்த மருத்துவமனை மருத்துவர் பர்வேஸிடம் வழங்கினர். உடன், உதவியாளர் ரமேஷ் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.