யானையால் பரபரப்பு

சத்தி தேசிய நெடுஞ்சாலையில் ஆம்புலன்சை வழிமறித்த காட்டு யானைகளால் பரபரப்பு;

Update: 2025-03-04 02:24 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காப்பகத்தில் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் -கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலையில் நடமாடுவதும், வாகனங்களை நிறுத்தி உணவுகள் இருக்கிறதா என தேடுவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக வனப்பகுதிகளில் செடி கொடிகள் காய்ந்து வறட்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உணவு தண்ணீர் தேடி யானை கூட்டங்கள் சாலை விவரம் வருவது சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது.இந்நிலையில் நேற்று இரவு ஆசனூர் மலைப்பகுதியில் இருந்து உடல்நலம் ஒன்றிய நபரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் ஆம்புலன்ஸ் சென்றபோது செம்மண் திட்டு என்ற இடத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் சாலையில் ஆம்புலன்சை வழிமறித்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஆம்புலன்ஸ் டிரைவர் வாகனத்தை சிறிது தூரம் முன்பே நிறுத்திவிட்டார். இதனால் ஆம்புலன்ஸ் அங்கிருந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. சிறிது நேரம் அங்கும் இங்கும் நடமாடிய காட்டு யானைகள் பின்னர் மீண்டும் வனப் பகுதிக்குள் சென்றது. இதன் பின்னர் ஆம்புலன்ஸ் அங்கிருந்து கிளம்பி சென்றது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது,தற்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் வெயிலின் தாக்கம் காரணமாக வறட்சி நிலை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் நடமாடுவது தொடர்கதையாகி வருவது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வனப்பகுதியில் வாகனங்களை இயக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Similar News