ராணிப்பேட்டையில் ராணுவ வீரர் மீது பீர் பாட்டிலால் தாக்குதல்
ராணுவ வீரர் மீது பீர் பாட்டிலால் தாக்குதல்;
ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டை அருகே எஸ்.என்.பாளையம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜய் (வயது 25). ராணுவ வீரர். இவர் அண்ணனின் திருமணத்திற்காக விடுமுறையில் வந்துள்ளார். நேற்று ம மாலை, ராணிப்பேட்டையில் இருந்து பொன்னை செல்லும் சாலையில் கீரைசாத்து பகுதியை சேர்ந்த நவீன் (35) என்பவருடன், அதேப்பகுதியை சேர்ந்த சிலர் தகராறு செய்துள்ளனர். இதை விஜய் தட்டிக்கேட்டதாக தெரிகிறது. அப்போது ஆத்திரம டைந்த வினோத்குமார் (35) என்ற வாலிபர் பீர் பாட்டிலால் விஜய்யின் மண்டையில் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த ராணுவ வீரர் விஜய் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து கீரைசாத்து பகுதியை சேர்ந்த வினோத்குமார், திவ்யகுமார் (20) ஆகிய இருவரை கைது செய்தனர்.