அரசு பொது மருத்துவமனையில் புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை பணிகளை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கும்மிடிப்பூண்டியில் அரசு பொது மருத்துவமனையில் புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை பணிகளை சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார்;

Update: 2025-03-04 05:29 GMT
திருவள்ளூர் கும்மிடிப்பூண்டியில் அரசு பொது மருத்துவமனையில் புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை பணிகளை சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனையின் தரத்தை உயர்த்தி புதிய கட்டிடங்கள் மூன்று கோடியே 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நடும் பூமி பூஜை இன்று கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மருத்துவமனையில் நோயாளிகளுக்கு போதிய இடவசதி அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் வகையில் புதிய கட்டிடத்தை விரைந்து கட்டி முடிக்க சட்டமன்ற உறுப்பினர் அறிவுறுத்தினார்

Similar News