வாணியம்பாடி அருகே ஏற்பட்ட அடுத்தடுத்து இருவேறு சாலை விபத்துகள்*
வாணியம்பாடி அருகே ஏற்பட்ட அடுத்தடுத்து இருவேறு சாலை விபத்துகள்*;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஏற்பட்ட அடுத்தடுத்து இருவேறு சாலை விபத்துகள்* ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் மின்சாதன பொருட்கள் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக உள்ள நிலையில் இன்று (03) மோகன்ராஜ் பணிநிமித்தமாக காரில் சென்னை நோக்கிச்சென்ற போது, திருப்பத்தூர் மாவட்டம்.. வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு, பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது கார் வந்து கொண்டிருந்த போது, திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே உள்ள தடுப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானதில் மோகன்ராஜ் காயமின்றி உயிர்தப்பினார், அதே போல் மேம்பாலத்தின் கீழ் ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது இந்த இரு விபத்துகள் குறித்து வாணியம்பாடி நகர காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்