நூற்றாண்டு கண்ட பள்ளி விழாவில் எம்எல்ஏ

மதுரை மேலூரில் நூற்றாண்டு கண்ட பள்ளி விழாவில் எம்எல்ஏ கலந்து கொண்டார்.;

Update: 2025-03-04 06:13 GMT
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், பதினெட்டாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா நேற்று ( மார்ச்.3)கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், இப்பள்ளியின் முன்னாள் மாணவர்களான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கா. தமிழரசன், முன்னாள் மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். எம் எல்.ஏ பெரியபுள்ளான் என்ற செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கா. தமிழரசன், முன்னாள் மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி ஆகியோர் கல்வியில் நன்று பயின்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பதினெட்டாங்குடி கிராமத்தில் 1924 ம் ஆண்டு பள்ளி கூடம் தொடங்கப்பட்டு இன்று நூற்றாண்டு விழா கண்டுள்ளது. இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் இன்று அரசு துறைகளான காவல் துறை, மருத்துவதுறை, வழக்கறிஞர் என பல்வேறு பெரிய பொறுப்புகளில் பதவி வகித்து வருகின்றனர். மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும், சேர்மன்களாகவும் பதவி வகித்து வருகின்றனர்.

Similar News