பேராவூரணி அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை துவக்கம் 

மாணவர் சேர்க்கை;

Update: 2025-03-04 16:28 GMT
தஞ்சாவூர் மாவட்டம்,  பேராவூரணி கிழக்கு தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை துவங்கியது.  நூறாண்டுகளைக் கடந்த, பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இக்கல்வி ஆண்டில் சேர்ந்த முதல் மாணவியான சரவணன் -  சாமுண்டீஸ்வரி தம்பதியின் மகளான ச.மதுஸ்ரீக்கு பள்ளியின் சார்பில் சால்வை அணிவித்தும், மலர் மாலை அணிவித்தும் வரவேற்பு செய்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.  இந்நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியர் (பொறுப்பு) செ.இராகவன் துரை, வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் க.ஷாஜிதா பானு, ஆசிரியர்கள் மெர்சி ஏஞ்சலா, சுரேந்தர், பாலாதேவி, செல்வராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News