ஜெயங்கொண்டம் புதிய தலைமை கழக பேச்சாளராக பழ.புனிதவேல் .போக்குவரத்து துறை அமைச்சர் பரிந்துரையில் தேர்வு
ஜெயங்கொண்டம் புதிய தலைமை கழக பேச்சாளராக பழ.புனிதவேலுவை போக்குவரத்து துறை அமைச்சர் பரிந்துரையின் பேரில் தலைமை கழகம் அறிவித்துள்ளது .;
அரியலூர், மார்ச்.5- ஜெயங்கொண்டம் செங்குந்தபுரத்தைச் சேர்ந்த பழ.புணிதவேலை தலைமை கழக பேச்சாளராக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. அரியலூர் திமுக மாவட்ட செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான சா.சி. சிவசங்கர் பரிந்துரையின் பேரில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் 6-வது வார்டு பகுதியைச் சேர்ந்த பழ.புனிதவேல் என்பவரை தலைமை கழக பேச்சாளராக திமுக கழகம் அறிவித்துள்ளது.உன்னை தலைமை கழக பேச்சாளராக அறிவித்த தலைமை கழகத்திற்கும் பரிந்துரை செய்த போக்குவரத்து துறை அமைச்சர் சா சி சிவசங்கர் அவர்களுக்கும் பழ.புனிதவேல் நன்றி தெரிவித்தார். அதைத் தொடர்ந்து திமுக மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.