ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், வேலுமணி நகர் பகுதி சேர்ந்தவர் ஏசு வில்லியம் (70).இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கலந்த 15 வருடங்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செல்வி கணவரை புரிந்து மகன்களுடன் கோயம்புத்தூரில் வசித்து வருகிறார். ஏசுவில்லியம் மட்டும் கோபியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் திடீரென அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதை அடுத்து பக்கத்து வீட்டில் வசிக்கும் அருண் என்பவர் அவர் வீட்டில் சென்று பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் மல்லாக்கப் பட்டவாறு மூச்சுப்பேச்சு இன்றி ஏசு வில்லியம் கிடந்துள்ளார். இது குறித்து கோயம்புத்தூரில் உள்ள செல்விக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார்.உடனடியாக செல்வி இதுகுறித்து வில்லியம்ஸ் தம்பி சாமுவேல் ராஜிக்கு போன் செய்து கூறியுள்ளார். உடனடியாக அவர் வீட்டுக்கு சென்ற சாமுவேல் கட்டிலில் அழுகிய நிலையில் அண்ணன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஏசு வில்லியம் உடலை மீட்பு பிரேத பரிசோதனைக்காக கோபியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வயது மூப்பு காரணமாக ஏசு வில்லியம் இறந்திருப்பது தெரிய வந்தது.